காட்பாடி அருகே ஆட்டோவில் இறந்து கிடந்த டிரைவர்

56பார்த்தது
காட்பாடி அருகே ஆட்டோவில் இறந்து கிடந்த டிரைவர்
காட்பாடி அருகே கீழ் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன், ஆட்டோ டிரைவர். இவருக்கு உமா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தீனதயாளன் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஆட்டோவில் சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் அவரைத் தேடினர். இந்நிலையில் நேற்று காலை அருப்புமேடு பகுதியில் அந்த வழியாக நடைபயணம் சென்றவர்கள் ஆட்டோவில் தீனதயாளன் இறந்துகிடப்பதைப் பார்த்து காட்பாடி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், தீனதயாளனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனவும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன்பே இவருக்கு ஆஞ்சியோ அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. 

அவர் சில நாட்களாக மாத்திரை சாப்பிடவில்லை என கூறப்படுகிறது. தீனதயாளன் இறந்தது குறித்து அவரது மனைவி உமா காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி