வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில், ரூபாய் 7 கோடியே 56 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட 4 வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள் மற்றும் கழிவறை தொகுப்பு கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி குத்து விளக்கு ஏற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மேலும், தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், ரூபாய் ஒரு கோடியே 44 லட்சம் மதிப்பில் இரண்டு பல்நோக்கு ஆய்வு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.