வேலூர் அடுத்த பள்ள இடையம்பட்டி பகுதியை சேர்ந்த ரமணி (47), நேற்று மாலை தனது மகளை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் ஊசூருக்கு சென்றார். வேலூர் பெண்கள் சிறை அருகே வந்தபோது, பின்னால் பைக்கில் வந்த இருவர் ரமணியின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.