வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் மார்ச் 7-ம் தேதி டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் சித்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த முகாம் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.