காட்பாடி: ரயிலில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

58பார்த்தது
காட்பாடி: ரயிலில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காட்பாடி ரயில் நிலையத்தில் தாணபூர்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது பொது பெட்டியில் கேட்பாரற்று இருந்த 10 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி