காட்பாடி: கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

56பார்த்தது
காட்பாடி: கதவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு
காட்பாடி செங்குட்டை நேரு நகரைச் சேர்ந்தவர் வளர்மதி (வயது 54). இவரது தங்கை வேம்பு (52). இருவரது வீடும் அரு கருகே உள்ளது. வேம்பு அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் கடந்த 6-ந் தேதி பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து நேற்று முன்தினம் வளர்மதி வீடு திரும்பினார். வீட் டிற்கு வந்து பார்த்தபோது வேம்பு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து வேம்புவுக்கும், காட்பாடி போலீசாருக்கும் வளர்மதி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் நகை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி