வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் புகழ்பெற்ற கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் வேலூர் எம். பி. கதிர் ஆனந்த் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தார். இந்த நிகழ்வின் போது முன்னாள் எம். எல். ஏ அமலு விஜயன், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய
திமுக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். இவர்களுடன் ஏராளமான பொதுமக்களும் திரளாகப் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்தனர்.