வேலூர் மாவட்டம் காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார். மேலும், அந்த பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தேவராஜ் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.