காட்பாடி அருகே பேருந்து நிழற்குடையை திறந்து வைத்த அமைச்சர்!

0பார்த்தது
காட்பாடி அருகே பேருந்து நிழற்குடையை திறந்து வைத்த அமைச்சர்!
காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் அரும்பருதி ஊராட்சியில், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 11 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிழற்குடையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா. சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ. காஞ்சனா, காட்பாடி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் எஸ். சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த புதிய நிழற்குடை அப்பகுதி மக்களுக்கு பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி