தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த டிஎஸ்பிக்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் டிஎஸ்பியாக பணியாற்றிய பழனி, ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கு டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கடலூர் சேத்தியாத்தோப்பில் பணியாற்றிய விஜயகுமார் காட்பாடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாற்றங்கள் அதிகாரிகளின் பணிகளை சீரமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.