பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 6-ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர். பிரதமர் பங்கேற்கும் இடங்களை தேர்வு செய்வதில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.