வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலூரில் இருந்து 50 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் என மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் நாளை (ஜூன் -10) முதல் இயக்கப்படுகிறது. பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.