பென்னாத்தூர் அருகே கோவில் திருவிழாவில் கத்திக்குத்து

58பார்த்தது
பென்னாத்தூர் அருகே கோவில் திருவிழாவில் கத்திக்குத்து
வேலூர் அடுத்த பென்னாத்தூர் அருகே உள்ள கேசவபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). இவர் சில நாட்களுக்கு முன்பு அந்தப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றார். அங்கு சாமி ஊர்வலத்தின்போது நடனமாடியதில் இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், கோபி, ராஜேஷ், சூர்யா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து பிரவீன்குமாரை தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரவீன்குமார் அளித்த புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் நேற்று வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி