வள்ளிமலை: ஊதுவத்தி கம்பெனியில் தீ விபத்து

0பார்த்தது
வள்ளிமலை: ஊதுவத்தி கம்பெனியில் தீ விபத்து
வள்ளிமலை அடுத்த மகிமண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட மாந்தோப்பு பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி கம்பெனியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி