வேலூர்: சொத்துவரி செலுத்த நோட்டீஸ்!

0பார்த்தது
வேலூர்: சொத்துவரி செலுத்த நோட்டீஸ்!
வேலூர் மாநகராட்சியில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பல வணிக கட்டிடங்கள் சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளன. இந்த தொகையை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. நோட்டீஸ் பெற்ற பிறகும் வரி செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கை மூலம் நிலுவையில் உள்ள சொத்து வரி வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி