வேலூரில் சாலை விபத்தில் காவலாளி பலி!

1பார்த்தது
வேலூரில் சாலை விபத்தில் காவலாளி பலி!
வேலூர் மாவட்டம் அரியூரைச் சேர்ந்த ராஜசேகர் (43) என்பவர், காட்பாடி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று, தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, காட்பாடி சில்க்மில் அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் தலையில் காயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராஜசேகர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து விருதம்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி