
வேலூர்: விஜய் மக்கள் சந்திப்புக்கு பந்தக்கால் நடும் விழா
வேலூரில் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்வு இன்று (பிப்ரவரி 19) பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு யாக பூஜையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மத கடவுளர்களின் படங்களும் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் பந்தல் அமைக்கவும், 5,000 நாற்காலிகள் போடவும் தவெகவினர் திட்டமிட்டுள்ளனர்.






























