திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் தெருநாய் கடித்ததில் நகராட்சி பெண் தூய்மை பணியாளர் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 3 பெண்கள் உட்பட 18 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.