கே.வி.குப்பம்: வர சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

75பார்த்தது
கே.வி.குப்பம்: வர சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
கே. வி. குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை நேற்று நடைபெற்றது. இங்கு வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. குட்டிகள் ரூ. 1, 500 முதல் ரூ. 3 ஆயிரம் வரையிலும், நடுத்தர ஆடுகள் ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரையிலும், பெரிய ஆடுகள் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலும் விலை போனது. 1, 000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றில் சுமார் 500 ஆடுகள் விற்பனை ஆனது. இந்த வாரம் சுமார் ரூ. 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்றனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி