கே. வி. குப்பம் அடுத்த வேப்பங்கநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகன் ராகுல் (வயது 22). இவர், கீழ்விலாச்சூர் கிராமத்தில் இருந்து வடுகநாங்கல் நோக்கி விரிஞ்சிபுரம் சாலையில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது ஆந்திராவில் இருந்து முட்டைக்கோஸ் ஏற்றிவந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில் தூக்கிவீசப்பட்ட ராகுல் சிகிச்சைக்காக குடியாத்தம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்துவிட்டார். அவருடன் வந்த உறவினர் ராஜா (65) லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதுகுறித்து, கே. வி. குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.