திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஏ கஸ்பா பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் வயது 42. இவர் சித்தூரில் தனது தங்கை வீட்டில் கிரகப்பிரவேசம் விழாவை முடித்து மீண்டும் ஆம்பூரை நோக்கி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போழுது விரிஞ்சிபுரம் அடுத்த மேல்மொனாவூர் அருகே சென்று கொண்டிருந்தபோழுது டாட்டா ஏசி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.