பேரணாம்பட்டு மாவட்ட எஸ் பி மதிவாணன் உத்தரவின்பேரில் மேல்பட்டி - பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற மேல்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 33) என்பவரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டனர். சோதனையில் அவர் 50 பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளுடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்து மேல்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.