வேலூர்: பாஜக அரசை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசை கண்டித்தும், மத்திய அரசு புதிய பெயர் மாற்றத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற்று மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலை திட்டத்தை அதன் அம்சங்களை மாறாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு நாள் உண்ணாவிரத அறவழிப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட சுமார் 250 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.