வேலூர்: விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்.. காவல்துறை விளக்கம்

1321பார்த்தது
வேலூர்: விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்.. காவல்துறை விளக்கம்
வேலூரில் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு காலதாமதமின்றி அனுமதி வழங்கப்பட்டதாக வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 22 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி வழங்கப்பட்டதாக த.வெ.க.வினர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. கோரப்பட்ட 4900 கட்சி நிர்வாகிகள் சந்திப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 10,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அறிவுறுத்தல்களை மீறி செயல்பட்டிருந்தாலும், அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி