பேரணாம்பட்டு: போதை பொருள் விற்ற.. 2 பேர் கைது

65பார்த்தது
பேரணாம்பட்டு: போதை பொருள் விற்ற.. 2 பேர் கைது
பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி சுற்றுப்புற கிராமங்களில் மேல்பட்டி போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வளத்தூர் கிராமத்தில் விமல்ராஜ் (வயது 30) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.அதைத்தொடர்ந்து புகையிலை, கூலிப் உள்ளிட்ட 72 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் விமல்ராஜை கைதுசெய்தனர். 

விமல்ராஜ் கடைக்கு கர்நாடக மாநிலம் கே. ஜி. எப். பங்காரு பேட்டையை சேர்ந்த காதர் அலி (36) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ரூ. 62 ஆயிரம் மதிப்புள்ள 48 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கொண்டு வந்தார். அவரையும் போலீசர் கைது செய்து, மோட்டார் சைக்கிளுடன் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி