குடியாத்தம் திருவிழாவில் 28 செல்போன் திருட்டு

969பார்த்தது
குடியாத்தம் திருவிழாவில் 28 செல்போன் திருட்டு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் போது, பக்தர்களிடம் இருந்து 28 செல்போன்கள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்டவர்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி