வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சீவூர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் காளை மாடு, பல போட்டிகளில் கலந்து பரிசுகள் வென்ற நிலையில், நேற்று மாலை நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அதன் தாடை கடுமையாக சேதமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.