ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்த யாதமரியைச் சேர்ந்த ராமதாஸ் (20) ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் குடியாத்தம் அடுத்த தமிழக எல்லையில் உள்ள பூசாரிவலசை கிராமத்துக்கு வந்துள்ளார். அங்குள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலின்பேரில், தீயணைப்புப் படையினர் சடலத்தை மீட்டனர். பரதராமி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.