ஒடுகத்தூர் அருகே விஷம் குடித்து வாலிபர் பலி

71பார்த்தது
ஒடுகத்தூர் அருகே விஷம் குடித்து வாலிபர் பலி
ஒடுகத்தூர் அருகே சின்னப்பள்ளிகுப்பம் இருளர் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 25), கூலி தொழிலாளி. இவரது மனைவி கவுரி (20), இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து 2 வயது பெண் குழந்தை உள்ளது. சதீஷ் தினமும் மது குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

அதேபோல் சதீஷ் மதுகுடித்துவிட்டு வந்துள்ளார். அப்போது, ஏன் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போடுகிறாய் என்று கணவனை, மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சதீஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கவுரி போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி