வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில், மர்ம நபர்கள் பின்புற சுவரை உடைத்து சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள 50 மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். விற்பனை முடிந்து கடையை மூடிவிட்டுச் சென்ற ஊழியர்கள் இன்று மதியம் கடை திறக்க வந்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. சிதறி கிடந்த மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.