குடியாத்தம் அருகே விசாரணைக்கு சென்ற ஏட்டு மீது தாக்குதல்

1152பார்த்தது
குடியாத்தம் அருகே விசாரணைக்கு சென்ற ஏட்டு மீது தாக்குதல்
குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பகுதியில் கடையில் பொருட்கள் வாங்கச் சென்ற அக்பர்பாஷா (29) என்பவர், அங்கு தகராறில் ஈடுபட்டிருந்த இஸ்மாயில் (21) மற்றும் அவருடன் இருந்தவர்களால் தாக்கப்பட்டார். 'யாருக்கு போன் செய்து சொல்கிறாய்' என்று கேட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அக்பர்பாஷா காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஏட்டு கேசவன் என்பவரும் தாக்கப்பட்டதாகத் தகவல். இதைத் தொடர்ந்து இஸ்மாயில், சலீம், ஆஜாம் உசேன், மெகபூப்பாஷா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி