வேலூர்: ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்: 4 பேருக்கு வலைவீச்சு

57பார்த்தது
வேலூர்: ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்: 4 பேருக்கு வலைவீச்சு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர், அதே கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் (45) என்பவரிடம் ரூ. 2 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பார்த்திபன், அருண் வீட்டிற்கு சென்று ரூ. 2 ஆயிரத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பார்த்திபன் ஆபாசமாக பேசி அருணை தாக்கியதாகவும், மேலும் பார்த்திபனின் உறவினர்களான ஆல்வின், கலையரசன், பாண்டியன் ஆகியோரும் சேர்ந்து அருணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி பார்த்திபன், ஆல்வின், கலையரசன் பாண்டியன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி