வேலூரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

55பார்த்தது
வேலூரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர் ஓட்டேரி சாமிநகரை சேர்ந்தவர் விமல்ராஜ் (29), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் படுக்கையறைக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. அவரின் தந்தை லோகநாதன் கதவை தட்டியும், கூப்பிட்டும் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள மின்விசிறியில் விமல்ராஜ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட லோகநாதன் கதறி அழுதார். இதுபற்றி தகவலறிந்த பாகாயம் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிந்து விமல்ராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி