வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அணைக்கட்டு பகுதியைச் சார்ந்த மூர்த்தி (55). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கணவரின் உயிரிழப்பிற்கு இழப்பீடு வழங்கக் கூறி அவரது மனைவி மகேஸ்வரி வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதி சாந்தி மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.15.67 லட்சம் வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.