ஆந்திர மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பள்ளிகொண்டா பகுதியில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது பைக்கில் வந்த குடியாத்தத்தைச் சேர்ந்த பாஷா என்பவரை சோதனை செய்ததில், அவரிடம் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 31 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.