குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நாளை (ஜூன் 10) காலை 10:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாசில்தார் மெர்லின் ஜோதிகா தலைமையில் நடைபெற உள்ளது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே, குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம் என தாசில்தார் தெரிவித்துள்ளார்.