குடியாத்தம்: புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

78பார்த்தது
குடியாத்தம்: புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
குடியாத்தம் மாவட்ட எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில், குடியாத்தம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள சைனகுண்டா சோதனைச் சாவடியில் குடியாத்தம் தாலுகா போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கே. வி. குப்பம் அடுத்த கவசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரபுதேவா (வயது 24), ராஜேந்திரன் (60) என்பதும், ஆந்திராவிலிருந்து 12 கிலோ புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிள் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி