குடியாத்தம்: பசு மாட்டை திருடிய 2 பேர் கைது

52பார்த்தது
குடியாத்தம்: பசு மாட்டை திருடிய 2 பேர் கைது
குடியாத்தம் ராஜா கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (63), விவசாயி. இவரது மாட்டு கொட்டகையில் இருந்து கடந்த 2-ம் தேதி பசு மாடு மற்றும் கன்றுக் குட்டி திருடு போனது. இந்நிலையில், லத்தேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (50), செல்வகுமார் (33) ஆகியோர் பசு மற்றும் கன்றுக் குட்டியை திருடி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த குடியாத்தம் போலீசார் 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி