வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக் அலுவலகத்தில், இன்று (பிப். 27) நகர்மன்ற மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் S. சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு நகரின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.