குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினியின் மகன் லிங்கேஸ்வரன் (17). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த லிங்கேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.