கணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி இரண்டு வாலிபர் பலி வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல்வளம் பகுதியில் புதியதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப்பணியின் போது அங்கு மேல் மாடியில் சில்வர் கைப்பிடி பொருத்தும் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சார்ந்த முகேஷ் சதீஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.