வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி 2வது வார்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாராமலும் தினசரி குப்பைகளை வாராமலும் சுகாதார சீர்கேடாகவுள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது புது ஆலியார் தெரு 1, 2, 3 ஆகிய தெருக்களை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் விரைவில் நடைபெறும் என்று வேலூர் மாவட்ட அமைப்பாளர் அன்வர் அலி அறிவித்துள்ளார்.