வேலூரில் 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி ரமேஷுக்கு (38) வேலூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று (பிப். 13) உத்தரவிட்டது. 2022 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ரமேஷ் மீது வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெற்றது. நீதிபதி ராதாகிருஷ்ணன் இந்த தீர்ப்பை வழங்கினார்.