வேலூர் அருகே ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

54பார்த்தது
வேலூர் அருகே ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது
வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 41), பொக்லைன் டிரைவர். இவர் கடந்த 30-ந் தேதி அதேப்பகுதியில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றதாகவும், அப்போது கடையின் அருகே வசிக்கும் ஆட்டோ டிரைவர் பரத் என்ற பரத்ராஜிக்கும் (24) இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பரத்ராஜ் சரமாரியாக ஆனந்தனை கைகளால் தாக்கினார். இதுகுறித்து அவர் விருஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பரத்ராஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி