ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய 3பேர் பலி

4பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் மீது எதிரே வந்த சொகுசு கார் மோதியதில், மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் காரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (20), வேலூர் மாவட்டம் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த சாஜன் (26), ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (19) என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி