வேலூர் மாவட்டம், கீ. வ. குப்பம் அபிராமி மகளிர் கலைக்கல்லூரியில் இன்று (19.11.2025) மாவட்ட ஆட்சியர் வே. இரா. சுப்புலெட்சுமி மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அறிஞர் வெ. பொன்ராஜ், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.