ராணிப்பேட்டை மாவட்டம் மேலப்புலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சமத்துவபுரம் அருகே சிறு பாலம் கட்டுமானப் பணியில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.