ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார்.
போலீசார் அவரை பிடித்து அவரது பையில் சோதனையிட்ட போது கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா நாரிபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31) என்பதும், விற்பனை செய்வதற்காக கஞ்சா எடுத்து வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்து ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.