ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் பாபுவின் மனைவி மேகலா, செய்யாறு சாலை பாலாற்றங்கரையில் உள்ள தோப்பு கருப்புசாமி கோயிலில் வேலை செய்து வருகிறார். புதன்கிழமை, தனது மூன்று வயது மகன் லக்ஷனை கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது, அவர் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.