ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் யார்டு பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, மே 17 மற்றும் 18ஆம் தேதி அரக்கோணத்தில் இருந்து வேலூருக்கும், அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் உட்பட 13 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.